Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்
தலைமை இல்லம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் இதுவரை
எடுக்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமானவடிவேல் சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ராஜகிரிய பொலிஸ் நிலையத்தில் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடு அளித்த போதும் ஆக்கபூர்வமாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுத்துமூல அறிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளேன் என தெரிவித்தார் தொழிலாளர் இல்லம் எனப்படுவது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வியர்வைத் துளிகளில் பிரதிபிம்பமாகும். பெருந்தோட்ட தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், குண்டர்களுடன் இணைந்து,
சங்கத்தின் தொழிலாளர் இல்லத்தை சேதப்படுத்தி மிகவும் கீழ்த்தரமான விதத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சொத்துக்களை சூறையாடும் நோக்கில் இவர்களினால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் விளைவினால் பல இலட்ச ரூபாய் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தன்னுடைய பாதுகாப்புக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago