2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

நபர் அடித்துக்கொலை; தாயும் மகனும் கைது

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்   

நபரொருவரை அடித்துக் கொலைசெய்து, ஹட்டன்- மொரயனகம வக்கம பிரதேசத்திலுள்ள நீரோடையில் வீசினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், தாயும் மகனும் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.   

ஹட்டன் பொலிஸாரினால், சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை மாலை கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும், அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.   

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் டிப்போவில் சாரதியாகக் கடமையாற்றும், மேற்படி பகுதியைச் சேர்ந்த எச்.டி.சுனில்சாந்த என்பவரின் சடலத்தை, மெராயனகம, வக்கமவில் உள்ள நீரோடையிலிருந்து, பொலிஸார் கடந்த 15ஆம் திகதி மீட்டனர்.   

இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்த பொலிஸார், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதன்போதே, சந்தேகத்தின் பேரில் மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர்.  

சம்பவத்தில் உயிரிழந்த நபர், விருந்தொன்றுக்குச் சென்று மதுபோதையில், முச்சக்கரவண்டியில் திரும்பிகொண்டிருந்துள்ளார். அந்த வண்டியின் சாரதியும் மதுபோதை​யிலேயே அன்றையதினம் இருந்துள்ளார்.  

முச்சக்கரவண்டியில் பயணித்த அந்த நபர். வண்டியிலிருந்து திடீரென கீழே விழுந்துவிட்டார். அவருடைய தலையில் காயம் ஏற்பட்டு, இரத்தமும் வடிந்துள்ளது.  

சற்றும் பதற்றமடைந்த முச்சக்கவண்டியின் சாரதி, காயமடைந்த பயணியை, மெதுவாக வண்டியில் ஏற்றிக்கொண்டு அவருடைய (சாரதியின்) வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.   

நடந்ததை தன்னுடை தாயிடம் தெரிவித்துள்ளார். வண்டியிலிருந்து கீழே விழுந்த நபரோ, மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். என்னசெய்வதென்று தெரியாத சந்தேகநபர்கள் இருவரும் அவரை அடித்தே கொன்றுவிட்டு, சடலத்தை, வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள நீரோடையில் வீசியெறிந்துள்ளனர் என்று அறியமுடிகிறது.  

கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .