2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நல்லதண்ணியில் சிக்கிய கறுஞ்சிறுத்தை

Editorial   / 2020 மே 26 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செ.தி. பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்‌ஷபான தோட்டத்தில் அழிந்து போனதாகக் கருதப்பட்ட  அரிய வகை மிருகங்களில் ஒன்றான கறுஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.

வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே இந்த கறுஞ்சிறுத்தை  இன்று  சிக்கியுள்ளது. 

மஸ்கெலியா பொலிஸாரும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இக்கருஞ்சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி மீட்டுள்ளதாகவும், அச்சிறுத்தையை உரிய சிகிச்சைகளுக்கா வனவிலங்கு அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 08 வயதான இக் கறுஞ்சிறுத்தை, உயிருடன் மீட்கப்பட்டு அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் ஊடாக முன்னெடுத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X