Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சியின் கீழ், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை, ஆட்சி மாற்றத்தின் பின்னர், தோட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து வருவதாகவும் இது அமைச்சரவைத் தீர்மானத்தை மீறும் செயலாகும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், தொழிற்சங்க பிரமுகர்களுடன், இன்று (18), நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நிலவுரிமையற்றவர்களாக வாழ்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில், பசுமை பூமி திட்டத்தின் கீழ் 7 பேர்ச் காணிக்கான ஒப்பந்தங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
“இதன்படி, கண்டி மாவட்டத்திலேயே, அதிகளவானோருக்கு காணி உறுதியைப் பெறுவதற்கான முதற்கட்ட ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது. சுமார் 4 ஆயிரம் பேருக்கு இவ்வாறு பத்திரங்கள் வழங்கப்பட்டன. 3 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்கான அளவீட்டு பணிகளும் இடம்பெற்றிருந்தன.
“எனினும், ஆட்சிமாற்றத்தின் பின்னர், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி ஒப்பந்தத்தை மீளப்பெறும் முயற்சியில், சில தோட்ட நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. கண்டி மாவட்டத்தில் கிரேட்வெலி, லிட்டில்வெலி, தெல்தொட்ட ஆகிய தோட்டங்களில், தொழிலாளர்களிடமிருந்து ஒப்பந்தங்கள் மீள பெறப்பட்டுள்ளன” என்று இதன்போது அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட கொள்கைதிட்டத்தை, தோட்ட நிர்வாகங்கள் எவ்வாறு மீறலாம் என்று கேள்வியெழுப்பிய அவர், அதுவும், அரச தோட்ட நிர்வாகங்களுக்கு தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு அனுமதி வழங்கியது யார் என்றும் வினவினார்.
இந்த விடயம் தொடர்பில், பெருந்தோட்டதுறை அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தோட்டத் தொழிலாளர்களின் சமூக, வாழ்க்கை நிலைமை மேம்படுத்தப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி வழங்கியிருந்ததையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அவரது ஆட்சி நடைபெறும் காலப்பகுதியில், தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உறுதியை பெறுவதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மீளப்பெறப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் பழிவாங்கப்படுகின்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த விடயத்தை, தேசிய முக்கியத்துவம்மிக்க பிரச்சினையாகக் கருதி, ஜனாதிபதியும் அரசாங்கத்தில் பங்காளிகளாகவுள்ள தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தாங்களும், தங்களால் முடிந்தளவான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago