2026 மே 09, சனிக்கிழமை

dd

நவம்பவர் 10க்கு முன்னர் ரூ.5,000 வழங்கப்படும் திகா உறுதி

Editorial   / 2019 நவம்பர் 01 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

தீபாவளி முற்பணமாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்த 5,000 ரூபாயை அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் கண்டிப்பாக வழங்கவுள்ளதாக, புதிய கிராமங்கள் உட்டகட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ​வுக்கு ஆதரவுத் தெரிவித்து, ஹட்டன் நகரில் நேற்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “எமது கோரிக்கைக்கமைய, தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலைச் சபையின் நிதி மூலம் 5,000 ரூபாய் முற்பணத்தை வழங்க நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனால் சில தலைவர்கள் அந்தப் பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்குவதைத் தடுப்பதற்காக, தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்தமையாலேயே எம்மால் அந்தப் பணத்தை தீபாவளிக்கு முன்னர் வழங்க முடியாமல் போனது” என்றார்.

எனினும் இது தொடர்பில், தேர்தல்கள் ஆணையாளரிடம் கலந்துரையாடியதன் பின்னர், அந்தப் பணத்தை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்பதால், தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்தவாறே, தீபாவளி கொடுப்பனவின் மிகுதிப் பணம் 5,000 ரூபாவை நாம் வழங்குவோம்” என்றார்.

தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் நிரந்தர ஜனாதிபதி சஜித் பிரேமதாஸவே எனத் தெரிவித்த அமைச்சர், அவரது தலைமைத்துவத்தின் கீழ் நாம் பெருந்தோட்ட மக்கள் அதிகம் நன்மையடைவர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .