2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாணயங்களை விற்க முயன்றவர் சிக்கினார்

Janu   / 2024 ஒக்டோபர் 17 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒல்லாந்தர் காலத்தில் இருந்த , VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய வந்த ஒருவர்  ஹட்டன் பொலிஸாரால் வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.  

கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாவிற்கு VOC கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கேடயம் மற்றும் இரண்டு நாணயங்கள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சந்தேகநபர் எதுவும் கூறவில்லை எனவும், இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.கணேசன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X