Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 19 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நானுஓயா டெஸ்போட்டில் காணாமல் போன சிறுவன், நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் ( 17) காலை, 9 மணியளவில், 12 வயதுடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவன் அன்றைய தினம் இரவு, நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார் என, நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனை அயல் வீட்டில் உள்ள நபர், ஒருவர் தொழில்பெற்று தருவதாகவும் அதற்காக, வீட்டிலிருந்து, 13,000 ரூபாய் பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
இதற்கமைய, சிறுவனிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, சிறுவனை நானுஓயா ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து நீர்கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனை நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் இனங்கண்ட உறவினர் ஒருவரே, சிறுவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago