2025 மே 05, திங்கட்கிழமை

நானுஓயா மட்டுமே ரயில்கள் ஓடும்

Editorial   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக ரயில் நிலையங்களான இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல் தூணுக்கு அருகில் புகையிரத பாதையில் புதன்கிழமை (06) மாலை 4 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததாக நானுஓயா புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியாபகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் நானுஓயா புகையிரத நிலையம் வரை   மட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X