2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நானுஓயா மதுபான நிலையத்தில் ரெகுலேட்டர் வெடித்தது

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா – நானுஓயா நகரிலுள்ள மதுபானம் விற்பனை நிலையமொன்றின் சமையலறையில் பயன்படுத்தப்பட்ட காஸ் இன்று (01)) மதியம் வெடித்துள்ளது.

எரிவாயுவை கடத்தும் ரெகுலேட்டர் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்பு சம்பவத்தையடுத்து காஸ் சிலிண்டர் தரையில் விழுந்து புரண்டுள்ளது.

குறித்த காஸ் சிலிண்டர் கவிழ்ந்ததால் அதிலிருந்த காஸ் எரிவாயு அனைத்தும் சுமார் 15 நிமிடங்கள் வெளியேறியதாக மேற்படி நிலையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர். காஸ் சிலிண்டரை அடுப்புடன் இணைக்கும் போதே இந்த வெடிப்பு  ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .