Editorial / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரமேஸ், டி.சந்ரு, எஸ்.கணேசன்
நானுஓயா நகரத்துக்கு அண்மித்தப் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், மேற்படி நபர் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் மண்சரிவுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago