R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியா- தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது.
தொடர் மழைக்காரணாமாக இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் , வெடிப்புக்கள் உள்ளதால் வீதியினை சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நானுஓயாவில் இருந்து டெஸ்போட் வழியாக செல்லும் வீதியில் காபட் இட்டு சுமார் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், உரிய முறையில் சீரமைக்கப்படாததனால் தற்போது பாரிய அளவில் வெடிப்புக்கள் தோன்றியுள்ளன.

3 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago