Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜே.தனா
நான்காவது மலையக சர்வதேச திரைப்பட விழா, கொட்டகலை கிறீன் ஹீல் ஹோட்டலில், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும், காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.
பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இவ்விழா, மலையக சினிமாத்துறை ஆர்வலர்களுக்கு, மிக சிறந்த களமாக அமையப் போவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இத்திரைப்படவிழாவில் திரையிடுவதற்காக, மலையக் கலைஞர்களின் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மலையகத்தை மய்யமாகக் கொண்டு உருவான 10 படைப்புகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள என்றும் மேலும் படைப்புகளை எதிர்பார்ப்பதால், வெள்ளிக்கிழமை (13) வரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே 13ஆம் திகதி வரை, குறுந்திரைப்படங்களை அனுப்ப முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விழாவில், 'டு லெட்' என்ற தமிழ் படமும் 'ஒசாமா' என்ற ஈரானிய படமும் 'ஓஹோ', 'கானா', 'பொக்குண' உட்பட ஐந்து மாற்று சினமா படங்களும் காண்பிக்கப்படவிருக்கின்றன.
இவ்விழா தொடர்பிலான மேலதிக விவரங்களை, 071-3039403 என்ற அலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
47 minute ago