2026 மே 09, சனிக்கிழமை

நான்கு ஆண்டுகளில் ’சிறுத்தைகளே பெருகின’

Editorial   / 2019 நவம்பர் 01 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வருட ஆட்சியில், தேயிலை மலைகள் காடுகளானமையும் சிறுத்தைகள் அதிகரித்ததுமே நடந்துள்ளதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு ஆதரவுத் தெரிவித்து, டயகம சந்திரிகாமம் தோட்டத்தில், நேற்று (31) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

“தீபாவளி முற்பணத்தைப் பெற்றுக்கொடுப்பதில் ஆறுமுகன் தொண்டமானும் இ.தொ.காவும் முட்டுக்கட்டையாக இருப்பதாக சிலர் கூவினர். ஆனால், தேர்தல் ஆணையகம், தீபாவளி முற்பணம் வழங்க எவ்விதத் தடையும் விதிக்கவில்லை என குறிப்பிட்டதன் பிறகு மூக்கடைப்பட்டனர்.

“பின்னர் தீபாவளி முடிந்த பிறகு தருவதாகக் கூறி இன்றுவரையும் எவ்வித நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை. அவர்களது பேச்சு, காற்றில் எழுதப்பட்ட வார்த்தைகள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .