Kogilavani / 2017 ஜூன் 13 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் முதலாம் வருட மாணவன் ஒருவரை தாக்கியக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு, பதுளை நீதவான் நீநயந்த சமரதுங்க, நேற்று (13) உத்தரவிட்டார்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மீது எவ்வித அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் பிணை இரத்துச்செய்யப்படும் என்று எச்சரித்த நீதவான், இவ்வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் நால்வரே, இவ்வாறு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago