2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாளை திறக்கப்படும் மாத்தளை நகரம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மஹேஸ் கீர்த்திரத்ன

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மாத்தளை மாவட்ட மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக, நிவாரணக் காலம் ஒன்றை வழங்க, மாத்தளை மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் (24) காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை மாத்தளை மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நிலையங்களை மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொருள்களின் விலைப்பட்டியல், கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

அதேப்போல் அரிசி, சீனி என்பவற்றை அதிக விலைக்கு விற்றல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாத்தளை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜீ.கே. பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே இன்று அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற முடியும் என்றும் தமக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் மாத்திரம் தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .