2025 மே 19, திங்கட்கிழமை

நாவலப்பிட்டி சிறுவனின் மரணத்தில் சந்தேகம்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

சிறுவனொருவன், சிறிய கால்வாயில் தவறி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், நாவலப்பிட்டி பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹரங்கல தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நாவலப்பிட்டி கிரிமதியாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய அஷேன் மின்சரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் தனது வீட்டிற்கு குடிநீர் வரும் நீர் குழாய்களை சீர் செய்வதற்காக (09) காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து ½ கிலோமீற்றர் தொலைவில் உள்ள கால்வாய்க்குச்  தனியாகச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவன்  வராததால், சிறுவனின் தாயும் சகோதரனும் தேடியபோது, சிறுவன் கால்வாயில் சடலமாக கிடப்பதை கண்டு நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன்  பிரதேசவாசிகளின் உதவியுடன், சிறுவன் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும்  நாவலப்பிட்டி பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X