2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நிமேஷின் புதைக்குழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

Editorial   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் பசறை, மீகஹகிவுலேவைச் சேர்ந்த நிமேஷ் சத்சார (வயது25) என்பவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் புதன்கிழமை (09) இரவு முதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (09) விசாரிக்கப்பட்ட வழக்கில், இறந்த சத்சர நிமேஷின் உடலை தோண்டி எடுத்து, மூன்று பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவால் பிரேத பரிசோதனை நடத்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில், இறந்தவரின் சடலம் புதைக்கப்பட்ட புதைக்குழிக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார்தெரிவித்தனர்.

பதுளை மீகஹகிவுலவைச் சேர்ந்த நிமேஷ் சத்சார என்ற இந்த இளைஞன் ஏப்ரல் 1 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது சித்திரவதையால் இறந்ததாகக் கூறி அவரது தாயார்,   செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சிஐடி) கோரியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X