Editorial / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவ்விருவரும் நேற்று (02) கைது செய்யப்பட்டிருந்தனர்.
மஹரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அவ்விருவரும் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின்னர் பொலிஸ் பிணையில் அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஆண், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவருடன் நெருங்கியிருந்தார் என அப்பெண் அடையாளம் காணப்பட்டார். ஆகையால் அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago