Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, மீள் செலுத்தும் தொகையாக, 25 இலட்சம் ரூபாயை, நுவரெலியா பிரதேச சபையிலிருந்துப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை, சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர்.
நுவரெலியா பிரதேச சபையின் விசேட கூட்டம், இன்று (1) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஊரடங்குச்சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நுவரெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதுத் தொடர்பாக இந்த விசேட கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், வறுமையை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை, உள்ளூராட்சி சபைகளின் ஊடாக, அவரரவர் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டுச் சென்று விநியோகிக்குமாறு, மத்திய மாகாண ஆளுனர் லலீத் யு கமகே உத்தரவிட்டுள்ளார் என்றார்.
ஆயிரம் ரூபாய் அறவிடும் வகையில், அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்குமாறும் இலவசமாக பொருள்களை விநியோகப்பதற்கு அனுமதி இல்லை என்றும், ஆளுநரால் கடிதம்மூலம் சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பருப்பு, செமன், முட்டை, வெங்காயம் ஆகிய அத்தியாவசியப் பொருள்களுக்கு, அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அப்பால் பிரதேசங்களில் வர்த்தகர்கள், கூடுதலான விலைக்கு விற்பனை செய்தால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, பிரதேச சபைகள் ஊடாகவும் மேற்கொள்ள முடியுமென ஆளுநரால் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் இருந்து பத்தாயிரம் உணவுப் பொதிகள், இலவசமாகக் கிடைக்க உள்ளன என்றும் அவைகளை பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago