2026 மே 06, புதன்கிழமை

’நிவாரணங்களோ பாதுகாப்பு சலுகைகளோ இல்லை’

எம். செல்வராஜா   / 2020 மார்ச் 25 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரேனா வைரஸ் தாக்கத்தையடுத்து பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு, இதுவரை எவ்வித நிவாரணப் பொருள்களோ பாதுகாப்பு சலுகைகளோ கிடைக்கப்பெறவில்லை என, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இலங்கை

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

தற்போது ஊரடங்குச் சட்டம் அடிக்கடி அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்களது பாதுகாப்பு கருதி வீட்டில் இருக்கும் நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் தங்களது சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வேலைகளுக்குச் சென்று வருகின்றமை வேதனையளிப்பதாகவும் அவர்களுக்கான உரிய பாதுகாப்பை வழங்காது, தோட்டக் கம்பனிகளும் அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

எனவே, ​தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளை வழங்குவது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்றும் அவர்களது சுய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .