Kogilavani / 2021 மே 13 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கு, உரிய நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை என்றும் இதனால் அவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு உரிய நிவாராணங்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்ஜெஸ்ட்ரி மேற்பிரிவு, கீழ்ப் பிரிவு, பிளங்கிபோனி, பார்த்போர்ட், அப்பகனி, ஹொன்சி ஆகிய தோட்ட பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக முடக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தை நிர்வகிக்கின்ற கம்பனியின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் எம்.பி கொண்டுவந்துள்ளார்.
6 minute ago
26 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
45 minute ago
1 hours ago