Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன்
அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில், பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே, முறையான பொறிமுறையை நடைமுறைப்படுத்தி, நிவாரணத் திட்டங்கள், பெருந்தோட்ட மக்களுக்கும் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர், பதுளை மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்,
நிவாரணம் வழங்கும் பொறிமுறைகளில், மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர் பிரிவுகள் என்பவற்றுக்கிடையில் வௌ;வேறான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களும் நிவாரணம் பெறத் தகுதியானவர்களாக இருக்கின்ற போதும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் செயலாளர்களுக்கு இவ்விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தி கிராம சேவையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தியர்கள் மூலமாக பொதுமைபாடான வேலைத் திட்டத்தை தோட்டங்களில் நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026