2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

’நிவித்திகலயில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்​ செய்கை முன்னெடுப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தின், நிவித்திகல தேர்தல் தொகுதியில், கைவிடப்பட்ட வயல் நிலங்களில், மீண்டும் நெற்செய்கை முன்னெடுக்கப்படும் என, இரத்தினபுரி மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் “சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருக்குக் கீழான திட்டத்துக்கிணங்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக, நேற்று (17), கருத்துத் தெரிவித்த அவர்,

புதிய ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்‌ஷ ​தெரிவு செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதில் அனைவரும் மும்முரமாக பங்கேற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையிலேயே, நிவித்திகல பகுதியில் கைவிடப்பட்ட வயல் நிலங்களை உழுது, அவற்றில் மீண்டும் நெல் விளைச்சளை ஏற்படுத்தும் முயற்சிகளில், பிரதேச இளைஞர்கள் முனைப்புடன் செய்து வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள தான், சுத்தம், சுகாதார நலன் பேணும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பதாகை, சுவரொட்டிகள், பொலித்தீன் பாவனையற்ற தேர்தல் பிரசாரத்தையே முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சம்பிரதாய தேர்தல் பிரசாரத்துக்குப் பதிலாக, இம்முறை பேஸ்புக் உள்ளிட்ட இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் ஊடாகலே தான் பிரசார நடவடிக்கையில் முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்மூலம், சுற்றுச்சூழலை மாசடையாமல் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .