2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றத்தை நாடவுள்ள இ.தொ.கா

Kogilavani   / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகரசபைகளில் ஏற்பட்டுள்ள அநீதிக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்தின் கட்டடத் திறப்பு விழாவில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 45 வருடங்களாக ஹட்டன் நகரசபைப் பகுதிக்குள் வாக்காளர்களாக இருந்தவர்களில் அநேகமானோர், தற்போது பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

“தலவாக்கலை நகரசபை எல்லைப் பகுதியிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளது.

“1992ஆம் ஆண்டளவில், அமரர் சொமிய மூர்த்தி தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச சபைகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்.

“இது தொடர்பில், அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க, ரேணுகா ஹேரத், சீ.பி.ரட்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ரேணுகாவின் பேச்சில் முரண்பாடு ஏற்பட்டதால் பிரதேசசபை அதிகரிப்பு விடயத்தில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டது.

“நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசபைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்தது. இதனை நாங்கள் தெளிவுபடுத்தினால் உரிமைகோருவதாக கூறுகின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X