2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நீரருந்த வரும் விலங்குகளுக்கு விஷம்

Gavitha   / 2021 ஜனவரி 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

நீர் தேடி வரும் மிருகங்களுக்கு விஷம் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உடவளவை சரணாயலயம், கல்தோட்டை, தியவின்ன, வெலிபொத்தயாய, ஹம்பேகமுவ ஆகிய பகுதிகளில் இந்நிலமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலங்குகள் நீர் அருந்த வரும் பகுதியில் இயற்கைக் குழிகள் வெட்டி அதில் விஷம் கலந்து வைப்பதாகவும் பின்னர் அந்த மிருகங்கள் இறந்த பின்னர், அதன் உடற்பாகங்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக, வனபரிபாலனத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X