2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி வைத்தியர் ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா            

சீரற்ற காலநிலையினால் பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை மற்றும் கடுங்காற்று ஆகியவற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

மஹியங்களை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவர்,  நேற்று (16)  மாலை மாப்பாக என்ற குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து, மற்றைய வைத்தியரின் அபயக்குரல் கேட்டு அயலவர்கள் ஓடி வந்து குளத்தில் இறங்கி தேடுதலை மேற்கொண்டார்கள்.

அவ்வேளையில் வைத்தியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டு,உடனடியாக சுவசரிய அம்பியூலன்ஸ் மூலம் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ​வைத்தியர்கள் ​தெரிவித்தனர்.

31 வயது நிரம்பிய திருமணமாகாத லக்சான் விஜயரத்ன என்பவரே குளத்தில் மூழ்கி மரணமாகியுள்ளவராவார். இவரது சடலம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டிருப்பதுடன்,மரண விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X