2026 மே 09, சனிக்கிழமை

நீரேந்துப் பகுதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிய இருவர் மடக்கிப்பிடிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாயவிலுள்ள நீரேந்துப் பகுதியில், மிக நீண்டகாலமாக இறைச்சிகளின் கழிவுகளைக் கொட்டி வந்த இருவரை, பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்து, கொஸ்லாந்தைப் பொலிஸாரிடம், நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளனர்.

வெல்லவாய நகர் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1 இலட்சம் பேருக்கு, குடிநீரை விநியோகிக்கும் 'வெல்லவாய- ஐஸ்பீல்ல' என்றழைக்கப்படும் நீரேந்துப் பகுதியில், மிக நீண்டகாலமாக இறைச்சிகளின் கழிவுகளால் கொட்டப்பட்டு வருவதாகவும் இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், அது தொடர்பில், சம்பந்தப்பட் அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை கொண்டுசென்றுள்ளனர்.

இறைச்சிக்கடைகளில் வெட்டி அகற்றப்படும் இறைச்சியின் கழவுகளே, இவ்வாறு மேற்படி நீரேந்துப் பகுதியில் கொட்டப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று (11) மேற்படிப் பகுதியில் இறைச்சிகளின் கழிவுகளைக் கொட்டுவதற்காக வந்த இருவரை, பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்துள்ளதுடன், அவ்விருவரையும் கொஸ்லாந்தைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சாரதி ஒருவரும் உதவியாளர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .