2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நீர்தேக்கத்தில் தத்தளித்த நபர் சடலமாக மீட்பு

Freelancer   / 2022 ஜூலை 16 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து நேற்று (15)  ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

மேற்படி நபர் நீர்தேக்கத்தில் தத்தளித்த படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் காப்பாற்றுவதற்காக பிரதேச மக்கள், பொலிஸார், விசேட அதிரடி படையினர், இளைஞர்கள் என பலரும் முயற்சித்த போதிலும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. 

உயிரிழந்த நிலையிலேயே அவரின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வட்டகொடை மடக்கும்புர தெற்கு பகுதியை சேர்ந்த சுப்பையா சுப்பிரமணியம் வயது 61 இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்தாரா அல்லது நீர்தேக்கத்தில் பாய்ந்துள்ளாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X