Freelancer / 2021 ஜூலை 18 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்
திம்புளை - பத்தன, டெவோன் நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே விழுந்து யுவதியொருவர் காணாமற்போயுள்ளார் என்று திம்புளை - பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.
டெவோன் நீர்வீழ்ச்சியின் உச்சியைப் பார்க்க நான்கு யுவதிகள் வந்ததாகவும், நீர்வீழ்ச்சியின் உச்சியில் உள்ள தண்ணீரில் கால்களைக் கழுவச் சென்றபோது குறித்த யுவதி வழுக்கி விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்
காணாமற்போனவர், தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மணி பவித்ரா என்ற 19 வயது யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
டெவோன் நீர்வீழ்ச்சியின் கற்பாறைப் பகுதியில் வழுக்கல் நிலை காணப்படுவதனால் அப்பகுதியில் நுழைய வேண்டாம் என வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதைத் தாண்டியே யுவதிகள் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
97 மீற்றர் உயரமான டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதி பாறை நிறைந்த இடம் என்றும், இந்த நாட்களில் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் மிக அதிகமாக உள்ளது என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026