2025 மே 03, சனிக்கிழமை

நுவ​ரெலியா விபத்தால் பதற்றம்

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா - பதுளை வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெலிமடை பகுதியை நோக்கி பணித்துகொண்டிருந்த காரொன்று  பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது. இதன்போதே, அவ்விருவரும் படுகாயமடைந்தனர்.

பாதசாரிகள் இதனையடுத்து, குறித்த காரை வீதியில் கைவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தையடுத்து, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடியதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கு தீர்வாக வேகத்தடையை ஏற்படுத்தி தருமாறுகோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அவ்வார்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இதனால், அவ்வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், குழுமியிருந்தவர்கள் அங்கிருந்து ​கலைந்துசென்றுவிட்டனர். என்பதுடன், இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X