Freelancer / 2023 மே 24 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையின் 25 ஆவது பொதுச்சபை கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இந்து கலாசார பேரவையின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினருமான எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் கடந்த வருட கூட்டரிக்கை, கணக்கரிக்கை, முன்னேற்ற செயலரிக்கை, புதிய தீர்மானங்கள் சமர்பித்தல் உட்பட புதிய நிர்வாக சபை தெரிவும் நடைபெறும். இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நுவரெலியா இந்து கலாசார பேரவையின் காப்பாளர்பி. மகேஸ்வரன் தலைமையில் மூன்று உறுப்பினர் கொண்ட குழுவினர் செய்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago