Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேசசபையில் நிலவிய இரண்டு வெற்றிடத்துக்காக, தலவாக்கலை மாவட்டத் தலைவரான சுப்ரமணியம் லோகநாதன், சிரேஷ்ட மகளிர் இணைப்பதிகாரியான சுப்பரமணியம் கௌரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பரிந்துரைக்கமைய இவ்விருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவருக்குமான நியமனக் கடிதங்கள், அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, இன்று (12) அமைச்சரால் வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதேசசபையின் உறுப்பினர்களான அன்ரன், ஜசிந்தா ஆகியோர் இராஜினாமா செய்து கொண்டதையடுத்து, இவர்களது வெற்றிடங்களுக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago