Janu / 2025 ஜூன் 18 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாநகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் மேயர், பிரதி மேயர் தெரிவு புதன்கிழமை(18) காலை 8.30 மணியளவில் நுவரெலியா மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா சபையின் பிரதி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக உபாலி வனிகசேகர, சுயேட்சை குழு சார்பாக அஹகம ராமநாயகலாகே அஜித் குமார ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 14 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 14 வாக்குகளை பெற்று சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட உபாலி வனிகசேகர தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட சுயேட்சை குழு உறுப்பினர் அஹகம ராமநாயகலாகே அஜித் குமார 11 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
இதே இந்த மாநகர சபைக்கு பிரதி மேயர் தெரிவு செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வீரமலை இளையராஜா அவர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக சிவன்ஜோதி யோகராஜா அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சிவன்ஜோதி யோகராஜா 14 வாக்குகளை பெற்று பிரதி மேயராக தெரிவானார். அவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வீரமலை இளையராஜா அவர்கள் 11 வாக்குகளே வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
1. நுவரெலியா மாநகர சபை 25 உறுப்பினர்களை கொண்டது.
• தேசிய மக்கள் சக்தி - 12
• ஐக்கிய மக்கள் சக்தி - 04
• ஐக்கிய தேசியக் கட்சி - 03
• சுயேட்சை - 03
• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 02
• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 01
எஸ்.கணேசன்,ரஞ்சித் ராஜபக்ஷ

4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago