Kogilavani / 2021 மே 24 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில், கடும் காற்றடன் கூடிய மழை வானிலை நீடித்துவருவதால், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலககோன் அறிவுறுத்தியுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக நுவரெலியா மாவட்டத்தில், எதிர்வரும் 28ஆம் திகதிவரை கடும் காற்றுடன் கூடிய மழை வானிலை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை பிரதான வீதிகளில் கற்பாறைகள் மற்றும் மண்திட்டு சரிந்து விழும் அபாயம் நிலவுவதுடன் பனிமூட்டமும் அதிகரித்துக் காணப்படுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் மேற்படி அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago