2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழில் முடங்கியது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சிறியளவில்  பேக்கரி தொழிலில் ஈடுபட்டவர்கள், அத்தொழிலிருந்து விலகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழிலில் ஈடுபட்டவர்கள் அதனைக் கைவிட்டுள்ளளனர் என நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று (27) அனுப்பியுள்ள விசேட  அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை மூடிவிட்டனர்.

பேக்கரி தொழிலில் ஏராளமானோர் வேலை பார்த்தனர் தற்போது வேலையும் பறிபோயுள்ளது. பாண் உள்ளிட்ட  பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், அவற்றை வாங்க மக்களிடம்  பணம் இல்லை.

இந்த நிலையில், பல வருடங்கள் பேக்கரி தொழில் செய்து வரும் தானும், இன்னும் சில நாட்களில் தன்னுடைய பேக்கரி ​தொழிலை கைவிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X