R.Maheshwary / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா -உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் ஹவாஎளிய பெண்கள் உயர்நிலை சிங்கள பாடசாலைக்கு அருகில் இன்று (23) காலை11.45) மணியலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராகலை பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று, ஹாவாஎளிய பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் பவுசர் ஒன்றின் பின் பகுதியில் மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நுவரெலியா தர்மபாலபுர, ரூவான் எளியவை சேர்ந்த டி.எம்.எஸ்.குமார திஸாநாயக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் பவுசர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .