2025 மே 05, திங்கட்கிழமை

நுவரெலியா - ஹட்டன் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

Mayu   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில்  வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு  முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையில், கடும் மழை காரணமாக வீதி தாழிறக்க அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதி ஒரு வழி போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால்  சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறு நானுஓயா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே குறித்த இடத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என சாரதிகளும் , பொது மக்களும்  கோரிக்கை விடுத்ததையடுத்து.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X