2026 மே 06, புதன்கிழமை

நுவரெலியாவில் எட்டு வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா நகர், பழையகடை வீதியில் இயங்கி வரும் எட்டு வர்த்தக நிலையங்களை, நுவரெலியா பொது சுகாதார பரிசோதகர்கள், இன்று(1) மூடியுள்ளனர்.

அத்தியவசிய உணவு பொருள்கள் விற்பனை நிலையம், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட எட்டு வர்த்தக நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

மேற்படி வர்த்தக நிலையங்களில், அக்குறணை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுடன் தொடர்புபட்டவை என்று தெரியவந்ததையடுத்தே, மேற்படி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், இந்த வியாபார நிலையங்களில் தொழில்புரிந்து வந்த அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்,  உரிமையாளர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா பிரதேச பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .