2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 09 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

வார இறுதி நாட்கள் விடுமுறையையொட்டி இன்றும் (9)  நேற்றும் (8) நுவரெலியாவுக்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நுவரெலியா நகரிலுள்ள சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் என்பன நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கிரகரிவாவி, விக்டோரியா பூங்கா, நுவரெலியா நகரம் மற்றும் ஹக்கல பூங்கா என்பவற்றுக்கு அதிகம் செல்வதாகவும்  இதனால் குறித்த இடங்களில் வி​சேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X