2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

நுவரெலியாவில் நடமாடும் சேவை

Mayu   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் பொதுமக்களுக்கு சட்ட ஆவணங்களை வழங்கும் நடமாடும் சேவை சனிக்கிழமை(16) திகதி  காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நடமாடும் சேவையில் ஆட்பதிவுத் திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், சட்ட உதவி ஆணைக்குழு, நட்ட ஈடு வழங்கும் அலுவலகம், இணக்க சபை ஆணைக்குழு, காணாமல் போனோர் அலுவலகம், திணைக்களம் ஆகியவற்றில் தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நுவரெலியா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த, தலவாக்கலை, நோர்வூட் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் இதன் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் ஆலோசனையின் பேரில் நுவரெலியா மாவட்ட செயலகம்  இத்திட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்ற நிலையில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X