2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

நுவரெலியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 21 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள்,மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக  இன்று  (21) காலை நுவரெலியா நகரின் மத்தியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்கள் மூடி ஆதரவினை வழங்கினர்.

மேலும் இராகலை நகரில் கருப்பு கொடிகளை பறக்கவிட்டு மரக்கறி கொள்வனவாளர்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

மரக்கறி விவசாயிகள்,வர்த்தகர்கள்,மற்றும் மரக்கறி தோட்டங்களில் தினக்கூலிகளாக பணியாற்றுவோர் தொழில் முடக்கத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

நகரில் எவ்வித பதற்றமும் ஏற்படாத நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அத்துடன், நேற்று நுவரெலியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மரக்கறிகள் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .