Kogilavani / 2021 மே 17 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியா மாவட்டத்தில், 9 கிராம சேவகர் பிரிவு பகுதிகள் இன்று(17) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று, நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.
ஹட்டனில் ஒரு பகுதியும், நோர்வூட் பிரதேசத்தில் மூன்று பகுதிகளும், பொகவந்தலாவ பிரதேசத்தில் ஐந்து பகுதிகளுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கெகர்ஸ்வோல்ட், பொகவான, லொய்னோன், கொட்டியாகல, பொகவந்தலாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், நோர்வூட் பொலிஸ் பகுதியில் வெஞ்சர், இன்ஜஸ்ட்ரி, டிலரி ஆகிய கிராம சேவகர் பகுதிகளும், ஹட்டன் பொலிஸ் பகுதியில் என்பீல்ட் கிராம சேவகர் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த பகுதிகளுக்குள் உட்பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தடை மீள் அறிவித்தல் விடுக்கப்படும்வரை அமுலில் இருக்கும் என்று, நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேற்படிப் பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago