Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்டத்தில், தபால்மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில், நேற்று(31) நடைபெற்றதாக, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.
தபால் மூல வாக்களிப்புக்காக, நுவரெலியா மாவட்டத்தில் 114 தேர்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் மிகவும் அமைதியாக வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில், 18, 124பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் நுவரெலியா தேர்தல் தொகுதியில், 6,502 பேரும் கொத்மலைத் தேர்தல் தொகுதியில் 2,879 பேரும், ஹங்குராங்கெத்த தொகுதியில் 4,692 பேரும், வலப்பனைத் தேர்தல் தொகுதியில் 4,051 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தபால் மூலம் வாக்களிப்பு நடைபெற்ற இடங்களில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் கண்காணிப்பு, மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக தேர்தல் அலுவலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்கள், தேர்தல்கள் அலுவலகம், மாவட்டச் செயலக அலுவலக அதிகாரிகளுக்காக, தபால்மூல வாக்குப் பதிவானது இந்த மாதம் 4,5 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதென்றும் குறித்த நாள்களில் வாக்கு பதிவு செய்ய முடியாத அதிகாரிகள், இந்த மாதம் 7ஆம் திகதி நுவரெலியா தேர்தல்கள் அலுவலகத்தில் தபால் மூலம் வாக்குப்பதிவை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென்றும், ரோஹன புஷ்பகுமார மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஹட்டன் கல்வி வலய ஆசிரியர்களின் தபால் மூல வாக்குப் பதிவுகள் ஹட்டன் ஸ்ரீ பாத வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்தப் பாடசாலையில் 7 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், இதில் 2,000க்கும் அதிகமான வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago