2026 மே 06, புதன்கிழமை

’நூரளையின் வசந்தத்தையும் கொவிட் 19 தின்றது’

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ்தொற்று, ஊடரங்குச்சட்டம் என்பவை காரணமாக, நுவரெலியா மாநகரில் வருடாந்தம் நடத்தப்படும் வசந்த கால களியாட்ட நிகழ்வுகளை, இம்முறை நடத்தாமல் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார்.

நுவரெலியாவின் வசந்தகால நிகழ்வுகள், ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 25ஆம் திகதிவரை நடைபெறும், களியாட்ட நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காக, வெளிநாட்டுப் பயணிகள், உள்நாட்டு பயணிகள் அதிகளவில் நுவரெலியாவுக்கு வருகை தருவர்.

நுவரெலியா மாநகர சபையால் நடத்தப்படும் இந்தக் களியாட்ட நிகழ்வுகள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இம்முறை கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர், கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளதால், நுவரெலியா வசந்தகால களியாட்டம் உட்பட எந்த நிகழ்வுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டது என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .