2026 மே 09, சனிக்கிழமை

dd

நெசவு கைத்தொழில் ஆலோசகர்கள் ஐவர் நியமனம்

சிவாணி ஸ்ரீ   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுகவ மாகாணதத்தில் புதிதாக ஐந்து நெசவு கைத்தொழில் ஆலோசகர்கள்,  சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்று (19) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், மாகாண சபை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் நெசவு கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதை கருத்திற் கொண்டே மேற்படி புதிய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.டி.சிசிர உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .