Freelancer / 2022 ஜனவரி 01 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை - பதுளை பிரதான வீதியில் 10ம் கட்டைப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது.
பசறையிலிருந்து கிரிமடுதன்ன பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், பிபிலேகமயில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் 10ம் கட்டைப் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago