2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

நோர்வூட் நில்வெளி தொழிற்பயிற்சி நிலையத்தின் குடிநீர் பகுதி சேதம்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கே.சுந்தரலிங்கம்

நோர்வூட் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும், நோர்வூட் நில்வெளி தொழிற்பயிற்சி நிலையத்தின் குடிநீர் பகுதி, இனந்தெரியாதவர்களால், நேற்று (17), இரவு, சேதப்படுத்தப்பட்டுள்ளது என, நோர்வூட் பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குடிநீர்ப் பகுதி சேதமடைந்துள்ளமையால், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையில் பல்வேறு தொழிற்பயிற்சிகளில் ஈடுபடும் சுமார் 150 மாணவர்கள், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அத்துடன், கழிவறையைக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்தத் தொழிற் பயிற்சி நிலையத்துக்க, நீண்ட நாள்களாக நிலவிய குடிநீரத் திட்டுப்பாடு காரணமாக, பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான காணி ஒன்றிலிருந்தே, நீர் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த நிலையத்துக்கும் தோட்ட முகாமையாளருக்கும் இடையில் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, குடிநீர் பெறப்பட்டு வந்ததாக, நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எனினும், கடந்த சில தினங்களாக, இரவு வேளையில் இந்த நிலையத்துக்கு அருகாமையில் வீடுகட்டும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அனுமதியின்றி, தங்களது நிலையத்தின் நீர் தாங்கியில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்வதாகவும் இதனால், இவ்வாறு அனுமதியின் நீரை பெறவேண்டாம் என்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

1995ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையம், பல காலமாக குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்தது என்றும்  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, குடிநீர்த் திட்டம் புனரமைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அடிக்கடி நீர் குழாய்களை உடைத்து விடுவதால், மாணவர்கள் குடிபதற்கும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அதிகமான மாணவர்கள், தூர பிரதேசங்களில் இருந்து கல்வி பயில்கின்றமையால், அசௌகரியத்துக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, இவ்வாறு நீர்க் குழாய் உடைக்கபட்டுள்ளமையால், மாணவர்களின் அத்தியாவசியத் தேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் நிலைய நிர்வாகமும் மாணவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .