Editorial / 2024 ஜூன் 18 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கன் பகுதியில் 04 வயதுடைய சிறுவன் கடந்த 17 ஆம் திகதி இரவு காணாமல் போனதாக அச்சிறுவனன் பெற்றோர், நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நல்லத்தண்ணி லக்ஷபான பிரதேசத்தை சேர்ந்த சிவதாசன் அபிலாஸ் என்ற சிறுவன், நோர்வூட் டன்கன் பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு பெற்றோருடன் வந்திருந்துள்ளார்.
அங்கு வீட்டின் அருகே விளையாடியதாகவும் பின்னர் பார்க்கும் போது காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
பின்னர், சிறுவனின் தந்தை சிவதாசன் வசந்தன், 119 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைப்பை எடுத்து தன்னுடைய பிள்ளை காணாமல் போனமை குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததாக, நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட நோர்வூட் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் 18ஆம் திகதி காலை வரையில் குழந்தையை கண்டுபிடிக்க முடியாது எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
38 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago