2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பொகவந்தலாவையில் வெள்ளம்: கால்வாயை அகலப்படுத்துமாறு கோரிக்கை

Kogilavani   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

ஹட்டனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக பொகவந்தலாவை லெச்சுமி தோட்டம் மத்தியப் பிரிவில் உள்ள கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்ததால்,  மேற்படி தோட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மழை காலங்களில் இக்கால்வாயினூடாக வெள்ளம் பெருக்கெடுப்பதால் இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த கால்வாயை அகலப்படுத்தி தருவதாக தோட்ட நிர்;வாகமும் மலையக அரசியல்வாதிகளும் நீண்டகாலமாக கூறி  வருகின்ற போதிலும் இதுவரை கால்வாய் அகலப்படுத்தப்படவில்லை என பிரதேச மக்கள்   தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் பெய்துவருகின்ற  மழை காரணமாக குறித்த கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுப்பதால் இத்தோட்டத்துக்கான பாதை வெள்ள நீரில் மூழ்குகின்றது. இதனால்,  பாடசாலை மாணவர்கள் தொழிலாளர்கள், வாகன சாரதிகள் உள்ளிட்ட பலரும் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.  

வெள்ளம் காரணமாக கால்நடை வளர்;ப்பு மற்றும் மரக்கறி செய்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  அம் மக்கள் தெறிவிக்கின்றனர்.

எனவே, கால்வாயை அகலப்படுத்தி தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .