Sudharshini / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதவிப் பிரதேச செயலாளரின் அச்சுறுத்தலால் மயக்கமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மாத்தளை பிரதேசத்தில் புதன்கிழமை(30) இடம்பெற்றுள்ளது.
மாத்தளை- வில்கமுவ பிரதேச செயலாளர் திணைக்களத்துடன் இணைக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் அதிகாரியான ஐ.ஜீ.சமரவீர என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலர் கூடியிருந்த போது உதவிப் பிரதேச செயலாளர், தகாத வார்த்தைகளால் மேற்படி அதிகாரியைத் திட்டியுள்ளதாகவும் இதனைச் சற்றும் எதிர்பார்த்திராத மேற்படி அதிகாரி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.
36 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
4 hours ago